October 14, 2010

பத்திரிக்கையாளர்கள் யார்?

வுட்லுக் பத்திரிக்கையின் 15 வது ஆண்டு விழாவில் அதன் முதுநிலை ஆசிரியர் வினோத் மேத்தா பேசியது என்னை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அவர் பேசியது அவசியம் அனைத்து பத்திரிக்கையாளர்களும், பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.... அவரது கருத்து:
"டில்லி முழுவதும் பத்திரிக்கை ஆசிரியர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் தான் நாட்டையே நடத்துவதாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஒரு போட்டி நடக்கும் போது இருக்கையில் அமர்ந்து பார்க்கும் பார்வையாளனாகத்தான் பத்திரிக்கையாளர்கள் இருக்க வேண்டும். நாமே விளையாட்டு வீரர்களாக முடியாது. ஆனால் நம்மில் பலரும் நாம் தான் விளையாட்டு வீரர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.'

1 comment:

அறிவகம் said...

வாழ்த்துக்கள் வேலுசாமி. உங்கள் வலைபூவை இப்போது தான் படிக்க நேர்ந்தது. பாலக்காட்டில் இருந்து கோவை வந்ததும். இங்குள்ள பத்திரிக்கையாளர்களின் ஒட்டுமொத்த செயல்பாடு வேடிக்கையாக இருந்தது. பத்திரிக்கையாளர்களுக்கு உள்ள எந்த தகுதியுமே இல்லாத ஒரு கூட்டத்தின் பெரும்பான்மை இவ்வளவு தான கோவை பத்திரிக்கையாளர்கள் அறிவுகூர்மை என்ற அளவுக்கு யோசிக்க வைத்தது. ஆனால் உங்கள் வலைதளத்தை படித்த போது தான் ஒரு பத்திரிக்கையாளனுக்குள் எவ்வளவு பெரிய எண்ண உலகம் இருக்கிறது என்பது புரிந்தது. தொடர்ந்து எழுதுங்கள். உங்களை போன்ற அனுபவமிக்க, திறமையான பத்திரிக்கையாளர்களின் தினசரி அனுபவங்கள் என்னை போன்றவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும். அன்புடன் ஆனந்த்.

பின்குறிப்பு : பிளாக்கரில் கருத்துக்கள் பதிவுசெய்யும் பெட்டிக்கு கீழ் உள்ள Word Verification எடுத்து விடுங்கள். மற்றவர்கள் கருத்து பதிவு செய்ய எளிமையாக இருக்கும்.